×

அறிவிப்புகள் அனைத்தும் அசத்தல் மக்கள் வாழ்வில் ஒளி வீசும் தமிழக பட்ஜெட்-தேனி மாவட்டத்தில் அனைத்து தரப்பினர் வரவேற்பு

தேனி :  தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களின் வாழ்வில் ஒளி வீசுவதாக உள்ளது என அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த மே மாதம் பதவியேற்றது. 2011ம் ஆண்டுக்கு பிறகு, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டுக்கு பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார்.

இதில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடிக்கான பட்டியல் தயாரிப்பு, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள், அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக மகப்பேறு விடுப்பை 12 மாதமாக உயர்த்திருப்பது பெண் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உள்ளாட்சித்துறை ஊழியர் பாண்டி மீனா கூறியதாவது: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் அரசு  துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பை 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்தியிருப்பது வரவேற்கத்தக்கது. மகப்பேறு அடையும் பெண்கள் குறைந்தபட்சம் ஓராண்டு காலம் குழந்தையோடு இருக்க வேண்டியுள்ளது. பெண்களின் துயர் அறிந்து அரசின் இந்த அறிவிப்பானது அரசுத்துறையில் பணிபுரியும் அனைத்து இளம்பெண்களுக்கும் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது’ என்றார்.

தொழிற்சங்க தலைவர் பாண்டுரங்கன், போடி: தமிழக பட்ஜெட் தங்க முட்டையிடும் வாத்து. மக்களுக்கு வாழ்வாதாரம்  தரும் அருமையான பட்ஜெட். பெண்களை காக்கும் பாதுகாப்பு அரண். தமிழக சட்டமன்ற நூற்றாண்டில் திமுக அரசின் பட்ஜெட் ஒரு மைல் கல். கட்டுமான  தொழிலாளி ரவிக்குமார், சின்னமனூர்: ரேஷன் கார்டில் குடும்ப  தலைவரை மாற்ற தேவையில்லை. ஆதிதிராவிடர், சீர்மரபினர்,  பழங்குடியினர் வளர்ச்சி, வறுமை கோட்டில் கீழ் உள்ளவர்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்விலும் ஒளி ஏற்றி  வீசும் பட்ஜெட்டாக உள்ளது.

தனலட்சுமி பழனிச்சாமி, சீலையம்பட்டி: டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்ததே மகிழ்ச்சியாக உள்ளது. பட்ஜெட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 அறிவிப்பு பெருமைக்குரிய விசயம். பொதுமக்களுக்கான அரசாக திமுக அரசு உள்ளது. நன்ற மறக்க மாட்டோம்’ என்றார்.


Tags : Tamil Nadu Budget ,Theni District , Theni: All parties have said that all the projects announced in the Tamil Nadu budget are shining a light on the lives of the public.
× RELATED தேனி மாவட்டம்; வெறிநாய் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்!