×

திருநாவலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு அதிகாரிகள் நியமிக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

உளுந்தூர்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது திருநாவலூர் கிராமம். இந்த கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் திருநாவலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய போது மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போதிய அதிகாரி இதுவரையில் நியமிக்கப்படாததால் நெல் கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை விரைந்து அளந்து மூட்டைகள் பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் திடீரென பெய்து வரும் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதம் ஆகும் நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுபோன்று விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், திருநாவலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு விரைந்து அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என்றும், மழையில் நெல் மூட்டைகள் நனையாமல் இருக்க தற்காலிக மேற்கூரைகள் அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirunavur Direct Paddy Procurement Station , Ulundurpet: Thirunavur village is near Ulundurpet in Kallakurichi district. Government direct paddy in this village
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...