கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணிகள் துவக்கம்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறனுடைய குழந்தைகள், கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்கள் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் குழந்தைகள் ஆகியோர் எண்ணிக்கை விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களில் இது நாள் வரை பாடபுத்தகங்கள் பெறாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி மீண்டும் பள்ளி செயல்பாடுகளில் ஈடுபட வைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். இப்பணியை முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் உதவி மாவட்ட திட்ட அலுவலர் ஆகியோர் மேற்பார்வையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

More
>