×

தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க புதிய திட்டம் : 76 லட்சம் விதைகள், ஒரு லட்சம் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு!!

சென்னை : தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022ம் ஆண்டுக்கான 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்டது போன்று வேளாண் பட்ஜெட்டும், மின் வேளாண் (இ-வேளாண்) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது பின்வருமாறு..

*டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கை ஆக்குகிறேன்.

*விவசாயிகளிடம் கருத்துக்கேட்ட பின்னரே இந்த வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.தஞ்சை, கோவை, கிருஷ்ணகிரி  மாவட்ட விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தேன்.

*வேளாண் வணிகர்களின் கோரிக்கைகளையும் கேட்டபின் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.உழவர்களை உயர்த்தி அழகு பார்க்கும் நோக்கத்தோடு வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட்

*உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துகளை கேட்டும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது

*வேளாண்துறையை சவால்களில் இருந்து மீட்டெடுக்கும் தொலைநோக்கு பார்வையுடன் தனி பட்ஜெட்
உணவு தன்னிறைவைத் தமிழகம் ஓரளவிற்கு எட்டிவிட்டது. உணவுப்பாதுகாப்பையும், ஊட்டச்சத்து பாதுகாப்பையும் அடுத்து 10 வருடங்களுக்குள் அடைந்துவிட வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்

*தற்போதுள்ள நிகர சாகுபடிப் பரப்பான 60 விழுக்காட்டை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை

*தமிழகத்தில் கூடுதலாக 11.75 லட்சம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்ய இலக்கு

*10 லட்சம் எக்டர் பரப்பளவிலான இருபோக சாகுபடியை அடுத்த 10 வருடங்களில் 20 லட்சம் எக்டராக உயர்த்த இலக்கு

*வேளாண் தொகுப்புத் திட்டம், இளைஞர்களை வேளாண் தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 16 அம்சங்களுடன் பட்ஜெட்

*ரூ.250 கோடியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

*கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் முதற்கட்டமாக 2500 கிராமங்களில் செயல்படுத்தப்படும்

*கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதே கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தின் முக்கிய அம்சம்

*கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்கப்படும்

*அண்ணா மறுமலர்ச்சி திட்டம் போல கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிவிப்பு

*சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை விவசாயிகள் திட்டம் செயல்படுத்தப்படும்

*முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் - ரூ.146.64 கோடி செலவில் நடைபெறும்   

*கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் பயன்படுத்தப்படும்

*சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும்

*தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக்கி சாகுபடி பரப்பை உயர்த்த திட்டம். தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்

*தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும்

*ஊரக இளைஞர் வேளாண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

*மானாவரி நிலத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு மானியம் வழங்கப்படும்

*அரசு விதைப்பண்ணைகள் மூலம் ரூ.25 லட்சம் செலவில் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்படும்

*முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் - ரூ.146.64 கோடி செலவில் நடைபெறும்

*இயற்கை வேளாண்மை வளர்ச்சித்திட்டம் - ரூ.33 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்

*நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் - ரூ.25 லட்சம் ஒதுக்கீடு

*இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் திட்டம் - ரூ.2.68 கோடி ஒதுக்கீடு

*ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் - 2500 இளைஞர்களுக்கு பயிற்சி

*ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம் - ரூ.5 கோடி ஒதுக்கீடு

*தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் ரூ.3 கோடி செலவில்  புபனை மேம்பாடு இயக்கம்!

*76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்!

*பனை மரத்தை வெட்டும்போது ஆட்சியரின் அனுமதி பெறுவது அவசியம்

*பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை

*நெல் ஆதரவு விலை - ஒரு குவிண்டால் சன்ன ரகத்திற்கு ரூ.70ல் இருந்து ரூ.100 ஆக உயர்வு    



Tags : Tamil Nadu , பட்ஜெட்
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து