×

டசால்ட் சிஸ்டம்ஸ் சிறப்பு மையம்

B.S.அப்துர் ரஹ்மான் கிரசெண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி வளாகத்தில் (BSACIST) டசால்ட் சிஸ்டம்ஸ் எனும் சிறப்பு மையம் (COE) இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த சிறப்பான மையம் BSACISTன் மெக்கானிக்கல் சயின்சஸ் துறையில் அமைக்கப்பட்டுள்ளது. டசால்ட் சிஸ்டம்ஸ் எனும் இந்த சிறப்பு மையம். மாணவர்களின் தனித்துவ திறன் மேம்பாட்டுக்களை வளர்க்க உதவுவதோடு. அவர்கள் படிக்கும் காலத்திலேயே தொழிற்துறைக்கு தயார்படுத்தவும் உதவுகிறது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற மாணவனின் திறமை உலகளாவிய மற்றும் உள்ளூர் டசால்ட் சிஸ்டம்ஸ்களின் கருத்தரங்கு மேடைகளில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும்.

COE என்பது ‘டசால்ட் சிஸ்டம்ஸ் அகாடமி மெம்பர் பிரோக்கிராம்’ அடிப்படையில் முன்முயற்சியாக உருவாக்கப்பட்டு, BSACIST டசால்ட் சிஸ்டம்ஸின் கல்விச் சான்றிதழ் வழங்கும் மையமாக விளங்கும். இந்த பிரோக்கிராம் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ் மற்றும் பாலிமர் இன்ஜினியரிங் துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு சார்ந்த திறன் மேம்பாட்டு அடிப்படையிலான மதிப்பை கூட்டும் பிரோக்கிராம்களை அளிக்கும்.

டசால்டு சிஸ்டம்ஸ் சிறப்பு மையத்தின் முக்கிய அம்சங்கள்:
* ‘டசால்ட் சிஸ்டம்ஸின் அகாடெமி சர்டிஃபிகெட் செண்டர்’ B.S.அப்துர் ரஹ்மான் கிரசெண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மதிப்புக்குரிய ஸ்தாபனமாகும்.
* B.S.அப்துர் ரஹ்மான் கிரசெண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்திற்கு பெருவாரியாக மதிக்கப்படும் ‘3DS அகாடெமி மெம்பர்’ விருதினை அளிப்பது.
* நிபுணர்களின் அறிவுரைகளை வழங்குதல் மற்றும் பயிற்சி சேவைகள் மாணவர்கள் மற்றும் போதிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
* B.S.அப்துர் ரஹ்மான் கிரசெண்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் அற்புத  மையத்திற்கான (COE) மார்கெட்டிங் மற்றும் விளம்பர பிரச்சாரத்தை உருவாக்கு.
* வேலைக்கு செல்ல வாய்ப்புள்ள மாணவர்களை வளப்படுத்தும்.
* உலகளாவிய மற்றும் உள்ளூர் புதுமை மையங்களுடன் தொடர்பு வாய்ப்பை அதிகப்படுத்தும்.
* புதிய தொழில்நுட்பங்களுடன் உலகத்தர பயிற்சியை வழங்குதல்.
* 12 முக்கியமான துறைகளில் தொழில்துறை தொடர்பை உருவாக்குகிறது.
* புதுமையை வளர்க்கும் கல்வி நிறுவனமாக ஆக்குவது மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் “hub & spoke” மாதிரியாக செயல்படும்.
* தொழில் மற்றும் கல்வித்துறை ஆய்வுக்கு ஆதரவளிக்கிறது.
* திட்ட அடிப்படையிலான கற்றல் முறையுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை கூர்மைப்படுத்துவும்.

Tags : Dassault Systems Specialty Center , Dassault Systems Specialty Center
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை