உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. இதில், தாய்ப்பால் குறித்து கர்ப்பிணிகளுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தாய்ப்பால் ஊட்டுதல் உறுதி செய்தல் பொறுப்பினை அதிகளவில் விழிப்புணர்வு செய்யும் வகையில் நகர, கிராமங்கள் தோறும் வாகனம் மூலம் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டது. இதையொட்டி, இதற்கான பிரசார வாகனத்தை கலெக்டர் ஆர்த்தி, நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள், தாய்மார்களுக்கு ஏற்படும் நன்மைகள், சீம்பாலின் நன்மைகள் ஆரோக்கியமான குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம் உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைத்து, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர் சற்குணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>