சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சடையம்பட்டியில் ஹரிகிருஷ்ணனுக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை உள்ளது. நேற்று முன்தினம் பணி முடிந்து அனைவரும் சென்ற நிலையில், நள்ளிரவில் உயர்மின் அழுத்தம் காரணமாகஒரு அறையில் திடீரென தீ பற்றியது. தகவலறிந்த சாத்தூர், சிவகாசி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து 3 மணி நேர போராடி தீயை அணைத்தனர். தீவிபத்தில் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகின. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: