×

புதுக்கோட்டை அருகே அகழாய்வில் பழமை நகர சான்று கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே அகழ்வாராய்ச்சி பணியின்போது, பழமையான நகரம் இருந்ததற்கான சான்றாக செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வேப்பங்குடி ஊராட்சியில் பொற்பனைக்கோட்டை கிராமம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 30ம் தேதி முதல் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் 2ம் நூற்றாண்டை சேர்ந்த மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், மன்னர்கள் கோட்டை கட்டி ஆட்சி புரிந்ததற்கான பல்வேறு அடையாளங்கள், குறியீடுகள் ஒவ்வொரு நாளும் கிடைக்க பெற்று வருகிறது.

இதுவரை முன்னோர்கள் பயன்படுத்திய மண் பாண்டங்கள், சிறிய ஆயுதங்கள், கருப்பு, சிவப்பு என அழகிய வேலைபாடுடன் கூடிய மண் பாத்திரங்கள், குடுவைகள், கிண்ணம், பெண்கள் விளையாடிய வட்டக்கல் துண்டு, வளையல்கள் உள்ளிட்ட சங்ககாலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு  பொருட்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், அகழாய்வு செய்யப்படும் இடத்திற்கு மேற்குப் புறத்தில் நேற்று தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பழமையான நகரங்கள் இருந்ததற்கான சான்றாக செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணி குழுவினர் ஆய்வு பணிகளை செய்து வருகின்றனர்.

Tags : Pudukkottai , Evidence of ancient city excavated near Pudukkottai
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை