சிறுமி பலாத்கார வழக்கு: ஆசாமிக்கு 20 ஆண்டு சிறை

திருவில்லிபுத்தூர்: எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைதண்டனை விதித்து திருவில்லிபுத்தூர் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள தண்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்தையா (50). இவர் 4.4.2017ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர் அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதுதொடர்பாக முத்தையா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், முத்தையாவிற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 7 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதி தனசேகரன் பரிந்துரை செய்தார்.

Related Stories:

>