×

நலத்திட்ட உதவிகள் பெற நரிக்குறவர்கள் விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:நரிக்குறவர் வகுப்பை சார்ந்த 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம். உறுப்பினர்களுக்கு விபத்தினால் ஏற்படும் ஊனம் மற்றும் மரணத்திற்கான உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்குக்கண்ணாடி செலவுத் தொகை ஈடுசெய்தல், முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இவைத்தவிர சுயதொழில் புரிய மானியம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும், நலத்திட்ட உதவிகளைப் பெறவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி உரிய படிவத்தில் பூர்த்தி செய்து உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.


Tags : Naskers , Victims can apply for welfare assistance: Kanchipuram Collector Information
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...