×

குன்னூரில் பூத்துக்குலுங்கும் செங்காந்தள் மலர்

குன்னூர் : ஈழத்தின் தேசிய மலர் மற்றும் தமிழகத்தின் மாநில மலரான செங்காந்தள் மலர்கள் குன்னூரில் பூத்துக்குலுங்குகிறது.
செங்காந்தள் மலர்  கார்த்திகை மாதங்களில் பூக்கக்கூடிய மலராகும். இதனை கார்த்திகைப் பூ என்றும் அழைக்கின்றனர். ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் காணப்படும் இந்த மலர் தமிழ்நாட்டின் மாநில மலராகும்.

செங்காந்தள் மலர்ச் செடியின் அனைத்துப் பாகங்களிலும் `கோல்ச்சிசின்’ என்ற அல்கலாய்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் பூக்கும் இந்த பூ, வேலிகளில் மட்டுமல்ல சாலையோரங்கள் மற்றும் காடுகளிலும் படர்ந்து வளரக்கூடியது. குறிப்பாக, மலைகள் மற்றும் சரிவுகளில் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் கால நிலைக்கு ஏற்றவாறு பர்லியாறு, கோத்தகிரி மற்றும் முதுமலை வனப்பகுதியில் வளரக்கூடியது. செங்காந்தள் மலர் ஈழத்தின் தேசிய மலராகும், ஜிம்பாப்வேயின் தேசிய மலராகும்.

இந்த தாவரத்தின் அமைப்பானது இது ஒரு கொடிவகை தாவரம். பசுமையானது, வலுவில்லாதது. இந்த தாவரம் மற்ற செடிகளின் மீதும், வேலிகள் மீதும், புதர்கள் மீதும் படர்ந்து வளரும். சுமார் 10 அடி முதல் 20 அடி உயரம் வரை வளரும் தாவரம். இந்த தாவரம் கிளைவிட்டு வளரும் வகை. இது ஒரு கிழங்கு வைக்கும் தாவரம், இதன் கிழங்கு கலப்பை போன்ற அமைப்பில் இருக்கும்.
இந்த தாவரம் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டது. தற்போது இந்த தாவரம் அழிந்து வரும் இனங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.


Tags : Kunnur , Coonoor: Chengandal, the national flower of Eelam and the state flower of Tamil Nadu, blooms in Coonoor.
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...