×

மஞ்சூரில் அதிகாரிகள் ரெய்டு பிளாஸ்டிக் பை விற்ற கடைகளுக்கு அபராதம்

மஞ்சூர் : மஞ்சூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. குந்தா தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் வருவாய் ஆய்வாளர் வேடியப்பன், கிராம நிர்வாக அலுவலர் லதா மற்றும் வருவாய்துறையினர் மஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள பெட்டி கடைகள், மளிகை மற்றும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், ஓட்டல், பேக்கரி, டீ கடைகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இதில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் காலாவதியான பொருட்கள், எடை, தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களும் கண்டுபிடித்து அவற்றை அதிகாரிகள் அழித்தனர்.

இதுகுறித்து தாசில்தார் மகேஸ்வரி கூறுகையில், மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தல் பேரில் சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் கேரி பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கேரி பேக்குகள், டிஸ்போசல் டம்ளர் மற்றும் தட்டுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதும், விற்பனை செய்வதும் மற்றும் உபயோகிப்பதும் குற்றமாகும். தடையை மீறி கேரி பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது அபராதம் மற்றும் நடவடிவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

Tags : Manzoor , Manzoor: Those who sold banned plastic bags in Manzoor area were fined. Kunda waited
× RELATED தேர்தலில் வாக்களித்தது புதிய...