×

மெட்ராஸ் பழைய மெட்ராஸ்

நன்றி குங்குமம் தோழி

மெட்ராஸ் துறைமுகம்

1902ம் ஆண்டு மெட்ராஸ் துறைமுகத்தின் புகைப்படம்தான் இது. 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது உலகின் அனைத்து நாடுகளுக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் இங்கிருந்துதான் நடைபெற்று வந்தது. 1875ல் துறைமுகம்

மெட்ராஸ் எண்ணெய் மில்

1870களில் எடுக்கப்பட்ட புகைப்படம். ஆட்டுக்கல் போன்ற அமைப்பு கொண்ட இந்த எண்ணெய் ஆலை மரத்தால் செய்யப்பட்டது. ஒரு பெரிய மரத்தொட்டியுடன் ஒரு பகுதி அரைக்கும் கருவி இணைக்கப்பட்டு இருக்கும். மறுபகுதி, காளை மாட்டுடன் இணைத்து விடுவார்கள். மாடு சுற்றி வர இதில் உள்ள பொருட்கள் அரைப்பட்டு எண்ணெயாக வெளியாகும்.

மசுலா படகு

மசுலா என்பது மிகவும் புகழ்பெற்ற சரப்ஃபிங் படகு. கடலில் பயணம் செய்வதற்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட படகு. மாங்காய் மரத்தால் அமைக்கப்பட்ட உயரமான இந்த படகினை எட்டு முதல் 12 பேர் வரை துடுப்பு போட்டு இயக்க வேண்டும். 19ம் நூற்றாண்டு இறுதி வரை மெட்ராசில் துறைமுகம் அமைக்கப்படாத காரணத்தால் நடுக்கடலில் இருக்கும் கப்பலுக்கு பொருட்கள் மற்றும் ஆட்களை மசுலா படகு மூலமாக இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.

மாவு அரைக்கும் பெண்கள்

மாமியார், மருமகள் இருவரும் இணைந்து மாவு அரைக்கும் புகைப்படம். அரிசி, கேழ்வரகு மற்றும் இதர பொருட்களை இதன் மூலம் அரைப்பது அன்றைய காலக்கட்டத்தில் வழக்கமாக இருந்தது.

மெட்ராஸ் மத்திய ரயில் நிலையம்

மத்திய ரயில் நிலையம் 1868-72 ஆண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டது. ஜார்ஜ் டவுன் பகுதியில் இரண்டு மாடிக்கட்டிடம் மணிக்கூண்டுடன் கோதிக் கட்டட அமைப்பு முறையில் ஜார்ஜ் ஹார்டிங் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. அமைக்கும் பணி துவங்கி 1896ம் ஆண்டு முழுமையடைந்தது.

தொகுப்பு: ஜி.சிவக்குமார்

Tags : Madras Old Madras ,
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!