உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு ஒற்றுமையாக பாடுபட வேண்டும்-செல்லத்துரை பேச்சு

கடையநல்லூர் : தென்காசி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் கடையநல்லூரில் நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி  தலைமை வகித்தார். மாநில சிறுபான்மை பிரிவு ரசாக், மாநில மாணவரணி துணை செயலாளர் ஷெரீப், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சேக்தாவூது செல்லப்பா, மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம், பேபி ரஜப் பாத்திமா, விவேகானந்தன், நல்ல சிவம், பொதுக்குழு லிங்கராஜ், முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் டாக்டர் செல்லத்துரை பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு  அனைவரும்  ஒற்றுமையாக பாடுபட வேண்டுமென்றார்.

 கூட்டத்தில் தலைமை பேச்சாளர் இஸ்மாயில், டாக்டர் சஞ்சீவி, ஒன்றிய செயலாளர்கள் ராமையா, ரவிசங்கர், லாலா சங்கரபாண்டியன், பொன் முத்தையாபாண்டியன், பூசை பாண்டியன், வெள்ளத்துரை, நகர செயலாளர்கள் செங்கோட்டை ரஹீம், ராஜகாந்த், பேரூர் செயலாளர்கள் ராஜராஜன், முகம்மது உசேன், சிதம்பரம், செண்பகவிநாயகம், சரவணன், ராஜராஜன்,

வெள்ளத்துரை, கோபால், மாறன்,  அணி அமைப்பாளர்கள் இலத்தூர் ஆறுமுகச்சாமி,  செங்கோட்டை வக்கீல் வெங்கடேசன், வல்லம் திவான்ஒலி, இசக்கிபாண்டியன், ஜபருல்லாகான், மருதப்பன்,  முத்துராமலிங்கம், பரமசிவன், கருப்பணன்,  மகளிரணி பூங்கொடி,  சுமதி, துணை அமைப்பாளர்கள் சாமித்துரை, ஹக்கீம், திரவியம், ஜெகதீசன், வீரமணி,

கிருஷ்ணசாமிபாண்டியன்,  இன்பராஜ், செல்வம், வேம்புராஜ், சரவணக்குமார், மாரிக்குட்டி, பொன்ராஜ்,  ஜான்சன்,தமிழ் செல்விமுருகன், ரெஜிகலா, மதிமாரிமுத்து, இஸ்மாயில், வெங்கடேஷ், சிவ ஆறுமுகம், முருகன் சாமிநாதன், மகேஷ்குமார்,  காதர் அண்ணாவி, கோமதிநாயகம், விஸ்வா சுல்தான், சாகுல்ஹமீது, செங்கோட்டை ஒன்றிய அவைத் தலைவர் கட்டாரி பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் வாசுதேவன், மணிகண்டன்,  நகர மாணவரணி துணை அமைப்பாளர் பெருமாள்துரை, கல்யாணி, சி.எம்.குமார், கருப்பசாமி, சுதாகர், சுரேஷ், ராஜதுரை, தங்கம், தினேஷ்  உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, உள்ளாட்சித் தேர்தலை சிறப்பாக நடத்திட தென்காசி மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரனை நியமித்த முதல்வருக்கும்  நன்றி தெரிவிப்பது, உள்ளாட்சி தேர்தலில் தென்காசி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பொறுப்புகளுக்கும் திமுக மற்றும் கூட்டணி சார்பிலும் போட்டியிடும் அனைவரது வெற்றிக்கும் அயராது பாடுபட வேண்டும். மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை வழிகாட்டுதலில் தேர்தல் பணிக்குழுவினரைநியமிப்பது  என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: