×

ஆக. 23ம் தேதி முதல் ஊர் தோறும் மக்கள் நாடாளுமன்றக்‍ கூட்டம்!: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் பேச்சு..!!

சென்னை: வருகின்ற 23ம் தேதி முதல் 27 வரை தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் மக்கள் நாடாளுமன்றக்‍ கூட்டங்கள் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கூட்டங்களில் மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறினார். ரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: வருகின்ற 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளிலும் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்பட்டு சபாநாயகர் தலைமையில் நடைபெறுகின்ற கூட்டத்தில் தீர்மானங்கள் முன்மொழிந்து, உறுப்பினர்கள் அனைவரும் விவாதித்து, மோடி சர்க்கார் நிறைவேற்றிய சட்டத்தை திரும்ப பெறுகின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மோடி அரசுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும். மோடி அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதின் மூலமாகவே இந்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இல்லையெனில் போராட்டம் மேலும், மேலும் பன்மடங்கு தீவிரமடையும் என்று குறிப்பிட்டார்.


Tags : Communist Party of India ,Secretary of State ,Ra. Mutharasan , Become. 23, People's Parliamentary Meeting, Ra. Mutharasan
× RELATED வாக்குச்சாவடியில் தாமரை வடிவ அலங்காரம்