முதல்வர் அளித்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம் : நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உரை!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ- பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.2021-2022க்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவர் ஆற்றிய பட்ஜெட் உரை பின்வருமாறு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திறமையாக வெளிப்படையாக செயல்படும் என நம்பி வாக்களித்துள்ளனர்.கலைஞர் முதல்வராக இருந்த போது எண்ணற்ற திட்டங்களை தீட்டித் தந்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் நிதிநிலை அறிக்கை தயாராகி உள்ளது. தலைநிமிரும் தொலைநோக்கு திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. வரும் 6 மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கையே இன்று தாக்கல் செய்யப்படுகிறது.முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம். தமிழக நிதி நிலையை சீரமைக்கும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருட அதிமுக அரசின் நிதி நிர்வாக சீர்கேட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு திமுக அரசின் முழுமையான பட்ஜெட்டிற்கு தற்போதைய பட்ஜெட் அடித்தளமாக இருக்கும்.

முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம்.பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றி முத்திரை பதித்தார் முதலமைச்சர்.தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்பட்டது.தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி வேளாண்மைக்கான தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும்.உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.வாக்குறுதி அளிக்கவில்லை என்றாலும் கொரோனா நிவாரணமாக உணவுப் பொருள் தொகுப்பு வழங்கப்பட்டது.

பயனாளிகளின் தரவுகள் சரியாக இல்லை என்பதால் சமூக பொருளாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை. மாநிலத்தில் உள்ள அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். மானியங்கள் சரியான பயனாளிகளை சென்றடைவதை உறுதிப்படுத்த மின்னணு அளவீட்டு முறை கொண்டு வரப்படும். தமிழக அரசின் அனைத்து தரவுகளும் கணினி முறையில் ஒருங்கிணைக்கப்படும். அரசுக்கு சொந்தமான நிலங்களின் விவரங்களை சேகரித்து ஒருங்கிணைக்க புதிய அமைப்பு உருவாக்கப்படும்,என்றார்.  

Related Stories: