×

கொரோனா 3வது அலை தொடங்கிவிட்டதா?: பெங்களூருவில் 10 நாட்களில் 500 குழந்தைகளுக்‍கு தொற்று உறுதி..அதிர்ச்சியில் பெற்றோர்..!!

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் முதலாவது அலை கொரோனா பரவலைவிட, 2வது அலை பரவல் தீவிரமாக பரவ தொடங்கியது. இதனால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகம். இந்த 2வது அலை பரவல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தாக்கும் வீரியம் கொண்டதாக உள்ளதால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 10 நாட்களில் 500 குழந்தைகளுக்‍கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக பெங்களூருவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்படுவோரில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம் என்றும் கடந்த 1ம் தேதியில் இருந்து 10ம் தேதிக்குள் பெங்களூருவில் 18 வயதுக்கும் குறைவான 499 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கர்நாடகா சுகாதாரத்துறை கூறியுள்ளது. இதில் 88 குழந்தைகள் 9 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 411 குழந்தைகள் 10 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 5 நாட்களில் 263 குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் கொரோனா மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இதனிடையே இன்னும் சில ஆண்டுகளில் குழந்தைகள் நோயாக கொரோனா மாறும் என்று அமெரிக்க நார்வே குழு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தீவிரம் பொதுவாக குழந்தைகளிடையே குறைவாக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மற்ற பொதுவான குளிர்கால காய்ச்சல் வைரஸ்களை போல கொரோனா மாறும். இன்னும் தடுப்பூசி போடப்படாத அல்லது வைரஸால் பாதிக்கப்படாத சிறு குழந்தைகளை பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Bangalore , Corona 3rd Wave, Bangalore, 500 children
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...