×

`அச்சப்படாமல் ஆடு’ சுப்மன்கில்லை சூடாக்கிய கோலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இதனைத் தொடர்ந்து இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராகக் களமிறங்கக் கூடிய இந்திய அணியில் இடம்பெற்று துவக்க வீரர் சுப்மன் கில் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக சோபிக்கவில்லை. இருப்பினும் சுப்மன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவுக்காக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் கில் 378 ரன்கள் எடுத்திருக்கிறார். ஆவரேஜ் 34.36. பெஸ்ட் ஸ்கோர் 91. மூன்று அரை சதங்கள் அடித்திருக்கிறார். எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் அச்சப்படாமல், மிக நேர்த்தியாகவே ஷாட்ஸ்களை தேர்வு செய்து ஆடுவது இவரது ப்ளஸ். அவர் அடித்த மூன்று அரைசதங்களும் ஸ்டைலிஷானவை. ஆனால், சதமாக கன்வெர்ட் செய்வதில் தான் தவறவிட்டார். இந்நிலையில் சுப்மன்கில் அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் அனைத்திற்கும் தயாராகத்தான் இருக்கிறோம். இங்கிலாந்தில் மேகமூட்டம்  அதிகமாக இருக்கும். இதனால், பந்துகள் ஸ்விங் ஆக வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு பயிற்சியில் ஈடுபடுவோம். காலநிலையை சரியாகக் கணித்து விளையாடினால் மட்டுமே வெற்றிபெற முடியும்” எனக் கூறினார். மேலும் “கேப்டன் விராட் கோலி என்னிடம் அடிக்கடி அச்சப்படாமல் விளையாடு. அப்போதுதான் ரன்களை குவிக்க முடியும். ஆட்டத்தின்போது மனநிலையைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கூறுவார். இதுபோல் களத்தில் ரோகித் ஷர்மாவுடன் பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது, பவுலர்கள் எப்படிப் பந்துவீசுவார்கள், என்ன மாதிரியான சூழ்நிலை நிலவுகிறது என்பது குறித்து ரோஹித் கூறுவார். குறிப்பாக, எப்போது அடித்து ஆட வேண்டும் என்பதையும் கூறுவார்” என்றார். சுப்மன் கில் உட்பட இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஈடுபடவுள்ள இந்திய வீரர்கள் தற்போது மும்பையில் 14 நாட்கள் தனிமை முகாமில் இருக்கிறார்கள். ஜூன் 2ஆம் தேதி இவர்கள் இங்கிலாந்து புறப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது….

The post `அச்சப்படாமல் ஆடு’ சுப்மன்கில்லை சூடாக்கிய கோலி appeared first on Dinakaran.

Tags : Koli ,World Test Championship Series ,India ,England ,Submongill Heated Goalie ,Dinakaran ,
× RELATED பதஞ்சலி நிறுவன விவகாரம்;...