×

வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள 6 பேர் கொண்ட அதிமுக சட்ட ஆலோசனை குழு: இபிஎஸ், ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் பலர் மீது வழக்குகள் புனையப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிமுக பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அல்லும் பகலும் அயராது ஈடுபட்டு வருபவர்களுக்கு அதிமுக என்றென்றும் பாதுகாப்பு அரணாக திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால், திமுகவினரின் தூண்டுதலால் அதிமுகவினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் வகையில், அதிமுக சார்பில்”அதிமுக சட்ட ஆலோசனை குழு” அமைக்கப்படுகிறது. அதன்படி,

* டி.ஜெயக்குமார் (அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர், அமைப்பு செயலாளர், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்)
* என்.தளவாய்சுந்தரம் (அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்)
* சி.வி.சண்முகம் (வழிகாட்டு குழு உறுப்பினர், விழுப்புரம் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்)
* பி.எச்.மனோஜ் பாண்டியன் (வழிகாட்டு குழு உறுப்பினர், அமைப்பு செயலாளர்)
* ஐ.எஸ்.இன்பதுரை (தேர்தல் பிரிவு துணை செயலாளர், சிறுபான்மையினர் நல பிரிவு துணை செயலாளர்)
* ஆர்.எம்.பாபுமுருகவேல் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளை பதிவு செய்யும்போது, அத்தகையவர்களுக்கு அதிமுக சட்ட ஆலோசனை குழு, அந்த வழக்குகளுக்கான அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும்.

Tags : Exponential Legal Advisory Group , Cases, legally, 6 persons, AIADMK law, EPS, OBS
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...