விழுப்புரம் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி

விழுப்புரம்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. இவர், சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக பேரறிவாளன் நேற்று திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் தாயார் அற்புதம்மாளும் வந்தார். பரிசோதனைக்குப்பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓரிரு நாட்கள் தங்கி சிகிச்சை பெற உள்ளார்.

Related Stories:

>