ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல் வீசி தாக்குதல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு 10 மணியளவில், கன்போட் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை வழிமறித்து, விரட்டியடித்தனர். வலைகளை பறித்து, வெட்டி கடலில் வீசினர். பாட்டில்கள், கற்களை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதனால், மீனவர்கள் வேகமாக கரை திரும்பினர். இதேபோல் மண்டபத்தில் இருந்து படகுகளில் சென்ற மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் செல்வம் (35) என்பவர் மண்டை உடைந்தது. இதனையடுத்து வலைகளை மடக்கி கொண்டு அதிகாலை 2.30 மணியளவில் கரை திரும்பினர். மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செல்வம் தலையில் 4 தையல் போடப்பட்டது. இது தொடர்பாக மண்டபம் மீன்வளத்துறை அதிகாரிகள், போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: