ஐதராபாத்தில் அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சி

சென்னை: நடிகர் அஜித் நடிகர் என்பதையும் தாண்டி கார், பைக் ரேசர், புகைப்பட கலைஞர், விஞ்ஞான ஆர்வலர் என பல முகங்களை கொண்டவர். தற்போது அவர் துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ரைபிள் கிளப்பில் உறுப்பினராக இருக்கும் அஜித், இங்கு பயிற்சி எடுத்து வந்தார். கோவையில் நடந்த போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தற்போது சொந்த காரணங்களுக்காக ஐதராபாத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருக்கும் அவர், ஐதராபாத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் அஜித் தேசிய அளவிலான ஒரு போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதற்காகவே இந்த பயிற்சியில் அவர் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories:

More