×

இன்று சேப்பாக்கம்-திண்டுக்கல் மோதல்: டிஎன்பிஎல் பைனலுக்கு யார்?

சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்)  டி20 கிரிக்கெட் போட்டியின் 5வது தொடர் இப்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடித்த திருச்சி வாரியர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் ஆகியவை  பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. முதல் தகுதிச் சுற்றில்  நடப்பு சாம்பியன் சேப்பாக்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிவிட்டது. தொடர்ந்து நடந்த எலிமினேட்டர் சுற்றில் திண்டுக்கல்  5 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வென்றது. இந்நிலையில் இன்று நடைபெறும் 2வது தகுதிச் சுற்றில் சேப்பாக்கம்-திண்டுக்கல் அணிகள் களம் காணுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் திருச்சியை எதிர்கொள்ளும்.

Tags : Chepauk ,Dindigul ,DNPL , Chepauk-Dindigul clash today: Who will win the DNPL final?
× RELATED எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த...