×

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டிலும் அஷ்வின் இல்லை

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலும்  முன்னணி வீரர் அஷ்வின் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முன்னணி சுழல் பந்து வீச்சாளர் அஷ்வின் சேர்க்காதது சர்ச்சையானது.  வி.வி.எஸ்.லட்சுமணன் உட்பட முன்னாள் வீரர்கள் பலரும் அஷ்வினை 2வது டெஸ்ட்டிலாவது சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இந்நிலையில் காயம் காரணமாக வேகம் ஷர்துல் தாகூர் 2வது டெஸ்ட்டில் விளையாட மாட்டார் அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதில் அஷ்வின் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.  

ஆனால் நேற்று முன்தினம் பேசிய கேப்டன் கோஹ்லி, ‘ஷர்துல் இல்லாவிட்டாலும் ஜடேஜா இருக்கிறார். அவர் பின் வரிசையில் நன்றாக பேட்டிங் செய்கிறார்’ என்றார். அப்போதே பேட்டிங்கிலும் கலக்கும் அஷ்வினுக்கு வாய்ப்பு இருக்காது என்பது தெரிந்தது. அதற்கேற்ப நேற்று  லண்டனில் தொடங்கிய 2வது டெஸ்ட்டிலும் அஷ்வின் சேர்க்கப்படவில்லை. ஷர்துலுக்கு பதில் வேகம் இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார். போட்டிக்கு முன்பு கேப்டன் கோஹ்லி, ‘நாங்கள் அறிவித்த 12 பேர் கொண்ட அணியில், நிச்சயமாக அஷ்வினும் இருந்தார்’ என்று கூறினார். ஒரு ஆட்டத்தில் 11 பேர்தான் விளையாட முடியும் என்கிறபோது, 12பேர் அணியில் அஷ்வினும் ஒருவராக இருந்தார் என்ற கேப்டன் சொல்வது கிண்டல் செய்வது போல் இருக்கிறது. அதுமட்டுமல்ல விராத் கோஹ்லி கேப்டனாக வந்ததில் இருந்து அஷ்வினுக்கு ஒருநாள், டி20 அணிகளில் இடம் இல்லாமல் போனது. இப்போது டெஸ்ட் அணியிலும் அஷ்வினை ஓரங்கட்ட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

* இந்தியா பேட்டிங்
மழை காரணமாக லார்ட்ஸ் அரங்கில்  2வது டெஸ்ட் நேற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் கிரெவ்லி, பிராடு, லாரன்ஸ் ஆகியோருக்கு பதிலாக ஆசீப் அமீத்,  மார்க் வுட், மொயீன் அலி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய தரப்பில் ரோகித் சர்மா, ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திய அணி முதல் இன்னிங்சை நிதானமாக விளையாடி வருகிறது.

Tags : Ashwin ,England , Ashwin was also absent from the 2nd Test against England
× RELATED டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்: அஷ்வினுக்கு பாராட்டு விழா