இமாச்சல் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 4 பேரின் சடலங்கள் மீட்பு

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து உயிரிழந்த மேலும் 4 பேரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசம், கின்னோர் மாவட்டத்தில் நிகுல்சரி தேசிய நெடுஞ்சாலை -5ல் சவுரா கிராமம் அருகே நேற்று மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஹரித்துவார் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, கார்கள் உட்பட ஏராளமான வாகனங்களில் இருந்தவர்கள் புதைந்தனர்.  நீண்டநேர போராட்டத்துக்கு பின் மண்ணில் புதையுண்டு இருந்த  வாகனத்தில் இருந்து 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. நேற்று முன்தினம் மட்டும் மொத்தம் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. மேலும், 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று காலை மேலும் 4 சடலங்களை மீட்பு குழுவினர் மீட்டனர். நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஏராளமானோர் மண்ணில் புதையுண்டு இருக்கும் வாகனங்களில் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது.

Related Stories:

More