ஓபிசி பட்டியலை தயாரிக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கும் மசோதா சமூக நீதிப் பயணத்தில் ஒரு மைல் கல்: கமல்ஹாசன் ட்விட்

சென்னை: ஓபிசி பட்டியலை தயாரிக்க மாநிலங்களுக்கு மீண்டும் அனுமதி அளிக்கும் மசோதா சமூக நீதிப் பயணத்தில் ஒரு மைல் கல் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இடஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் உச்சவரம்பு எனும் அநீதியும் விரைவில் நீக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதர பிற்படுத்தப்படுத்த வகுப்பினரை (ஓபிசி) வகைப்படுத்தி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு மீண்டும் அதி காரம் வழங்கும் 127-வது அரசியல மைப்பு சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையிலும் நேற்று நிறை வேறியது.

நாடாளுமன்ற இரு அவை களிலும் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன், இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வரும். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் ஓபிசி பட்டியலை தயாரிக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேறி இருக்கிறது. சமூகநீதிப் பயணத்தில் இது ஒரு மைல்கல். இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு எனும் அநீதியும் விரைவில் நீக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Related Stories: