போலி வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவை தடுக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: போலி வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் பதிவை தடுக்க புதிய வழிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் மனுவை விசாரித்த ஐகோர்ட் பார் கவுன்சில், டிஜிபி பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் போலி வழக்கறிஞர்கள் அதிக அளவில் பெருகிவிட்டனர் மனுதாரர் முத்துக்குமார் வாதத்தில் தெரிவித்துள்ளார். ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டம் பயின்றதாக கூறி போலி வருகை சான்றிதழ் பெற்று பதிவு செய்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார். போலி வழக்கறிஞர்கள் பதிவை தடுக்க தமிழ்நாடு அரசு கூடுதலாக சட்டக்கல்லூரிகளை தொடங்கியுள்ளது. பி.எல் ஹானர்ஸ் படிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் போலி வழக்கறிஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Related Stories:

More
>