உலக யானைகள் தினம்... சர்வதேச இளைஞர் நாள்...தேசிய நூலக தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

சென்னை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின்

உலக யானைகள் நாள் செய்தி

ரிவால்டோவின் காயத்துக்குச் சிகிச்சை அளித்து, மீண்டும் காட்டுக்கு அனுப்பிய தமிழ்நாடு வனத்துறைக்கு எனது பாராட்டுகள்.உலக யானைகள் நாளான இன்று, யானைகளைப் பாதுகாக்கவும், அவற்றை அடைத்துவைத்துத் துன்புறுத்துவதை முடிவுக்குக் கொண்டுவரவும் உறுதியேற்போம்.

கம்பீர விலங்கான யானையின் மாண்பை உறுதிசெய்வது மனிதகுலத்தின் கடமையாகும்,என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச இளைஞர் நாள்

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துச் செய்தி

மனிதகுலத்தின் எதிர்கால நம்பிக்கையான இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்தும்  சர்வதேச இளைஞர் நாள்  இன்று! இளைஞர்களுக்கு தேவையான உறுதுணையையும், அவர்களின் சிறகுகள் விரிவதற்கான சூழலையும் உருவாக்கித் தரும் அரசாக தி.மு.க. அரசு என்றென்றும் துணை நிற்கும்!இளைஞர் எழுச்சியே நாட்டின் வளர்ச்சி! என்று தெரிவித்துள்ளார்.

                             

தேசிய நூலக நாள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தேசிய நூலக நாளையொட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள செய்தி

தேசிய நூலக நாள் இன்று!

புத்துலகக் கனவுக்கு வழிகாட்டுபவை புத்தகங்களே! அதனால்தான் முத்தமிழறிஞர் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தார்! பொன்னாடைகள், பூங்கொத்துகள் தவிர்த்து புத்தகங்களை வழங்குமாறு நான் கேட்டுக் கொண்டதும் அவர்வழியில்தான்.வாசிப்பு நமது சுவாசிப்பாகட்டும்! என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More