×

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்க!: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆணை..!!

சென்னை: 50 லட்சம் மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 50 லட்சம் மாணவர்கள் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா பேரிடர் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களின் மதிய உணவை பெற்று கொள்ள முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் பின்தங்கிய மாணவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்திட குழந்தை தொழிலாளர்களாக மாறும் சாத்தியங்கள் உள்ளன.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையால் பள்ளிகளில் இடைநிற்றலை கனிசமாக அதிகரிப்பதுடன் அவர்களின் எதிர்காலமும் வெகுவாக பாதிக்கிறது. இந்நிலையில், மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி மற்றும் முட்டை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. மதிய உணவு கிடைக்காததால் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயம் உள்ளதால் பள்ளிகளில் தீவிரமாக கண்காணிப்பை நடத்த வேண்டும். வேலை செய்யும் மாணவர்களை மாவட்ட ஆட்சியர் மூலம் கண்டறிந்து கல்வியை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Commissioner , Government School, Student, Lunch, Commissioner of School Education
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...