×

ரோஜர்ஸ் கோப்பை: சிமோனா ஹாலெப், எலினா அதிர்ச்சி தோல்வி..! டியாஃபோவிடம் வீழ்ந்தார்

டொரோன்டோ:இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த  கனடா டொரன்டோவில் நடந்து வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் 2ம் சுற்றுப் போட்டியில் ஷபோவலோவும், பிரான்சஸ் டியாஃபோவும் மோதினர். ஷபோவலோவ், ஏடிபி தரவரிசையில் தற்போது 10ம் இடத்தில் உள்ளார். டியாஃபோ தரவரிசையில் 52ம் இடத்தில் உள்ளார். ஆனால் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டியாஃபோ, முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி, அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து 2வது செட்டையும் 6-4 என கைப்பற்றி, ஷபோவலோவை வீழ்த்தினார். மற்றொரு 2ம் சுற்றுப் போட்டியில் போலந்து வீரர் ஹியூபர்ட் ஹர்காசுடன், ஜப்பான் வீரர் கீ நிஷிகோரி மோத இருந்தார். ஆனால் போட்டி துவங்குவதற்கு சற்று நேரம் முன்னதாக, தசைப்பிடிப்பு காரணமாக போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக நிஷிகோரி அறிவித்தார். இதையடுத்து ஹர்காஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த போட்டியில் 6ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்காவின் டேனியல் காலின்சுடன் மோதினார். இதில், 6-2,4-6,4-6 என்ற செட் கணக்கில் ஹாலெப் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 3ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா, 6-3, 3- 6, 2-6 என்ற செட் கணக்கில், இங்கிலாநதின் ஜோஹன்னா கோண்டாவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். 10ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்தேசியா, 1-6,6-3,6-2 என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவிடம் தோல்வி அடைந்தார். நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் ஆர்யனா சபலென்கா 7(7)-6(4), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்னை போராடி வீழ்த்தினார். செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, முதல் நிலை வீராங்கனை பெலாரசின் , விக்டோரியா அசலென்கா, கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரி ஆகியோரும் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தனர்.

Tags : Rogers Cup ,Simona Halep ,Elina ,Diaphov , Rogers Cup: Simona Halep, Elena shock defeat ..! Fell to Diafo
× RELATED மியாமி ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப்பை வீழ்த்திய படோசா