×

5000 காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கம் : ட்விட்டர் நிறுவனத்தை மிரட்டி ஒன்றிய அரசு செயல்பட வைப்பதாக காங்கிரஸ் கண்டனம்!!

டெல்லி : டெல்லியில் பாலியல் பலாத்கார கொலைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை டுவிட்டரில் வௌியிட்ட விவகாரத்தால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. அதனை  தொடர்ந்து நேற்றிரவு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப்  சுர்ஜேவாலா, ஏஐசிசி பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அஜய் மாக்கன்,  கட்சியின் மக்களவைத் தலைவர் மாணிக்கம் தாகூர், அசாம் பொறுப்பாளர் மற்றும்  முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர்  சுஷ்மிதா தேவ் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ  டுவிட்டர் கணக்கு  முடக்கப்பட்டது. இதற்கு அக்கட்சியின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் மட்டும் செயல்முறைக்கு வந்துள்ளது.

இருப்பினும் ராகுல் காந்தி உள்ளிட்ட 5000 மூத்த காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்கு முடங்கி உள்ளதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.காங்கிரஸ் தலைவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்குவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை தடுத்துவிடலாம் என்று பிரதமர் மோடியின் எண்ணம் பலிக்காது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அரசுக்கு எதிராக கருத்து ஏதும் தெரிவித்தால் அந்த பக்கங்களை முடக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது என்றும் ட்விட்டர் நிறுவனத்தை மிரட்டி எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அதனை செயல்பட வைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. 


Tags : Congress ,Twitter ,US , பாலியல்
× RELATED கேரளாவில் மின்னணு இயந்திர பிரச்னை...