×

ஆர்டர் செய்ததோ கேமரா..டெலிவரி ஆனதோ பெயிண்ட் டப்பா!: ஃபிளிப்கார்ட்டின் செயலால் அதிர்ந்து போன இளைஞர்..!!

சென்னை: சென்னை திருவெற்றியூரில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணைய சேவையில் விலை உயர்ந்த கேமராவை ஆர்டர் செய்த இளைஞருக்கு விளையாட்டு கேமராவுடன் பெயிண்ட் டப்பாவும் வந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். திருவெற்றியூர் சத்யமூர்த்தி நகரை சேர்ந்த வினோத், அழகிய புகைப்படங்கள் எடுக்கும் ஆசையில் ஃபிளிப்கார்ட்டில் வந்த ஆஃபர் மூலம் 28,500 ரூபாய் மதிப்புள்ள கேனான் EOS 3000 D ரக கேமராவை புக் செய்துள்ளார். இதற்காக 12 மாதங்கள் இ.எம்.ஐ. தவணையையும் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து வந்த பார்சலை டெலிவரி ஊழியர் வினோத்தின் வீட்டில் கொடுத்துள்ளார்.

எடை குறைவாக இருந்ததால் சந்தேகமடைந்த வினோத் அந்த பார்சலை உடனடியாக பிரித்து பார்த்த போது கடும் அதிர்ச்சி அடைந்தார். அதில் பதிவு செய்த கேமராவுக்கு பதிலாக குழந்தைகள் விளையாடும் பழைய பிளாஸ்டிக் கேமராவும், லென்ஸிற்கு பதிலாக பெயிண்ட் டப்பாவும் இருந்ததால் பரிதவித்து போனார். இது தொடர்பாக வினோத் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருவெற்றியூர் இளைஞருக்கு நேர்ந்த குளறுபடிக்கு காரணம் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஃபிளிப்கார்ட்டின் இத்தகைய நடவடிக்கையால் புகைப்படங்கள் எடுக்கும் ஆசையில் புக் செய்தவர் எண்ணம் சிதைந்து போனது.

Tags : Flipkart , Order, camera, delivery, paint can, flipcard
× RELATED ஐ போன் ஆர்டர் ரத்தால் மன உளைச்சல்...