75வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னை கோட்டையில் காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை..!!

சென்னை: நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை ஒட்டி கோட்டை கொத்தளத்தில் 3வது நாளாக சுதந்திர தின விழா ஒத்திகை நடைபெற்று வருகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மாநில அளவில் அனைத்து மாநில முதல்வர்களும் தேசியக் கொடியை ஏற்றுவார்கள். இதேபோல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக கோட்டையில் கொடியேற்ற உள்ளார். மாவட்ட அளவில் கலெக்டர்கள் கொடி ஏற்றுவார்கள். மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் போன்றவற்றிலும் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெறும். அப்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இந்நிலையில், 75வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னை கோட்டையில் காவல்துறையினர் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறையினர், போக்குவரத்து காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் ஒத்திகை அணிவகுப்பில் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியை ஒட்டி காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமர சாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

Related Stories:

More
>