நாடாளுமன்றம் செயல்படாததற்கு பாஜகவே காரணம்.. அவைக்காவலர்கள் குண்டர்கள் போல் செயல்பட்டனர் : திருச்சி சிவா காட்டம்!!

டெல்லி :எந்தவிவாதமும் இல்லாமல் 35 மசோதாக்களை ஆளுங்கட்சி நிறைவேற்றியுள்ளது என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்த திட்டமிடப்பட்டன. ஆனால், கூட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பெகாஸஸ், வேளாண் சட்டம், பெட்ரோல் விலை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக கூட்டத்தொடர் நிறைவடைய 2 நாள்கள் மீதம் இருந்த நிலையில், நேற்று(ஆக.11) காலையுடன் மக்களவையும், மாலையுடன் மாநிலங்களவையும் முடித்துக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடித்தது, பெகாஸஸ் விவகாரம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து விஜய் சவுக் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதனிடையே திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது,எனது 20 ஆண்டுக்கால நாடாளுமன்ற அனுபவத்தில் இத்தகைய சம்பவத்தை பார்த்ததில்லை. எந்த விவாதமும் இல்லாமல் 35 மசோதாக்களை ஆளுங்கட்சி நிறைவேற்றி உள்ளது.எதிர்க்கட்சி எம்பிக்கள் 2 பேர் கீழே இழுத்து தள்ளப்பட்டனர்.ஒன்றிய அரசின் சர்வாதிகார போக்கை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன.நாடாளுமன்றம் செயல்படாததற்கு முழுக்க முழுக்க ஆளுங்கட்சியே காரணம்.நாடாளுமன்ற அவைக்காவலர்கள் குண்டர்கள் போல் செயல்படுகின்றன,என்றார்.

Related Stories:

More
>