தமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் 8 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அறிவிப்பு

சென்னை: தமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் 8 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. தமிழகத்தின் 8 காவல் ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் மெச்சத்தக்க பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர்கள் சிதம்பர முருகேசன், கண்மணி ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சிறப்பாக விசாரணை செய்த 152 போலீசாருக்கு விருது வழங்குகிறது மத்திய அரசு.

Related Stories:

>