×

18ம் படி கருப்பண்ணசாமிக்கு 18 அடி நீளம், 200 கிலோ எடை மெகா அரிவாள் நேர்த்திக்கடன்

திருப்புவனம் : அழகர்கோவில் 18ம் படி கருப்பண்ணசாமிக்கு திருப்புவனத்தை சேர்ந்த பக்தர் 200 கிலோ எடை, 18 அடி நீள மெகா அரிவாளை நேர்த்திக்கடனாக வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் அரிவாள் தயாரிக்கப்பட்டது. போலீசார் கெடுபிடி காரணமாக, திருப்பாச்சேத்தியில் வீச்சரிவாள் தயாரிக்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டது.

தற்போது விறகு வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு அடி நீள அரிவாள் மட்டும் தயாரிக்கப்படுகிறது. மேலும் ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் கோயில்களில் நேர்த்திக்கடனுக்காக செலுத்தப்படும் அரிவாள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. திருப்புவனத்தில் தற்போது 12 அரிவாள் பட்டறைகள் செயல்படுகின்றன.

திருப்புவனத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதுரை அழகர்கோவில் 18ம் படி கருப்பண்ணசாமிக்காக 18 அடி நீளமும், 200 கிலோ எடையும் கொண்ட ராட்சத அரிவாளை நேர்த்திக்கடனாக வழங்கியுள்ளார். பொதுவாக பெரிய அளவில் அரிவாள் செய்யும் போது எடையை குறைத்து விடுவார்கள். ஆனால் இந்த ராட்சத அரிவாள் 18 அடி நீளமும், 200 கிலோ எடையும் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

 அழகர்கோவிலில் தனியாக மேடை அமைத்து அரிவாள் வைக்கப்பட உள்ளது. முக்கியமாக நான்கு திசைகளிலும் இரும்பு கம்பிகள் வைத்து இழுத்து கட்டப்பட்டு நிலை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Alagar koil, Karupanna swami,18 Feet Billhook
× RELATED ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி...