12 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 42 ஆக்சிஜன் செறிவூட்டிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 12 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 42 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன. திருவள்ளூரில் உள்ள ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவனம், காவேரிராஜபுரத்தில் உள்ள ஜிஎன்கே பவுண்டேசன் மற்றும் சேவியர் மேலாண்மை கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒருங்கிணைந்து திருவாலங்காடு, பூண்டி, கடம்பத்தூர், திருத்தணி ஒன்றியங்களில் உள்ள 12 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 5 மற்றும் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 42 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை  வழங்கியது.

இதனை கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் வழங்க, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பெற்று கொண்டனர். நிகழ்ச்சியில் டாக்டர்கள் தினேஷ், கிரிதரன், ஜிஎன்கே பவுண்டேசன் தலைவர் ஜி.நவீன், பொருளாளர் ஜி.ரமேஷ், அறங்காவலர்கள் ஜி.சத்யா, ஜி.சாய்குமார், ஐஆர்சிடிஎஸ் தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>