×

பூமியை கண்காணிக்கும் இஓஎஸ்-03 செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது: ஆயுட் காலம்10 ஆண்டுகள்

ஸ்ரீஹரிகோட்டா: பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று அதிகாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கொரோனா தொற்று காரணமாக ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் சோதனை, ஏவுதலை பெருமளவு குறைத்துள்ளது.  இந்நிலையில், பூமியை கண்காணிக்க இஓஎஸ்-03 என்ற செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று விண்ணில் ஏவுகிறது. இதற்கான `கவுன்ட் டவுன்’நேற்று அதிகாலை 3.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தொடங்கியது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், `விண்ணில் ஏவப்பட உள்ள இந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2வது தளத்தில் இருந்து இன்று காலை 5.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதிலிருந்து புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் 19 நிமிடங்களுக்கு பிறகு தனியாக பிரிந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த செயற்கைக்கோள் பூமியின் தட்ப வெப்பநிலை, புயல், மழை, விவசாயம், காடு, நீர்நிலைகள், சூறாவளி, மேக வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்களை கண்காணித்து புகைப்படம் எடுத்து முன்கூட்டியே எச்சரிக்கை அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது செயற்கைக்கோள்
பிரேசில் நாட்டின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 19 செயற்கைக்கோள்களை இஸ்ரோ கடந்த பிப்ரவரியில் விண்ணில் ஏவியது. அதன் பிறகு, கொரோனா காரணமாக புதிதாக எந்த செயற்கைக்கோளையும் இஸ்ரோ ஏவவில்லை. இந்தாண்டு அது ஏவ உள்ள 2வது செயற்கைக்கோளாக இஓஎஸ்-03 அமைந்துள்ளது.

Tags : Earth , Earth-observing EOS-03 satellite launches today: lifespan 10 years
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?