×

சன் டிவியில் சனி, ஞாயிறு ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் முதன்மை வகிக்கும் 14 போட்டியாளர்கள்

சென்னை: அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிற சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் தமிழ் சமையல் நிகழ்ச்சியின் அறிமுக எபிசோடில் தேர்வுசெய்யப்பட்ட 14 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9:30 மணியிலிருந்து 10:30 வரை சன் டிவியில் மாஸ்டர் செஃப் தமிழ் சமையல் கலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் தங்களது இடத்தை பிடிப்பதற்காக நடைபெற்ற ஒரு தீவிரமான சமையல் திறன் போட்டியில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 24 போட்டியாளர்கள் பங்கேற்று கவுரவமிக்க விருதை வெல்வதற்கான தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பொங்கல் ச்சீஸ் கேக் என்பதிலிருந்து சாக்லேட் பேன் வரை தேர்வுசெய்யப்பட்ட 14 போட்டியாளர்கள் தங்களது சமையல் திறனை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி நடுவர்களின் பாராட்டுதல்களை பெற்றனர்.உணவுப்பிரியர்களின் நீண்டநாள் காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிற உலகப்புகழ்பெற்ற இந்த சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் தமிழ், சன் டிவியில் கடந்த வார இறுதியில் முதன்முறையாக ஒளிபரப்பானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியின் முதல் எபிசோட், அற்புதமான தொடக்கத்தை கொண்டிருந்தது. இன்னோவேட்டிவ் ஃபிலிம் அகாடமி, என்டேமோல் ஷைன்-ஆல் தயாரிக்கப்படும் மாஸ்டர் செஃப் தமிழ், இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அறிமுக நிகழ்ச்சியின் மூலம் உலகம் எங்கும் உள்ள தமிழ் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

 முதல் எபிசோடில் போட்டியாளர்கள், 28 எபிசோடுகளை உள்ளடக்கிய காலஅளவில் இனிமேல் ஒருவர் மற்றொருவருக்கு எதிராக பரபரப்பான தீவிர போட்டியில் ஈடுபடவிருக்கின்றனர். மாஸ்டர் செஃப் தமிழ்-ன் கவுரவமிக்க விருதை வெல்வதன் மூலம் அந்நபரை உலகெங்கும் பிரபலமடைய செய்யப்போகிற இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும். சிக்கலான பணிகள் மற்றும் நுணுக்கமான சமையல் யுக்திகளை உள்ளடக்கியதே இந்நிகழ்ச்சி. உலகெங்கிலும் பிரபலமாக உள்ள வெவ்வேறு சமையற்கலை பாணிகள் மற்றும் அற்புதமான சமையல் திறன்களை கொண்டு இந்த சமையற்கலை ரியாலிட்டி நிகழ்ச்சி அனுபவத்தை போட்டியாளர்களுக்கு மட்டுமன்றி பார்க்கும் ரசிகர்களுக்கும் தரும்.

மாஸ்டர் செஃப் தமிழ் சமையல் நிகழ்ச்சியில் அடுத்த கட்ட நிகழ்விற்கு வெற்றிகரமாக நுழைந்திருக்கிற 14 போட்டியாளர்களின் பட்டியல்: 1) வின்னி சுக்லா. 2) தாரா ரைன். 3) டி.சி. செல்வ சுனிதா. 4) சுமித்ரா ராஜேஷ். 5) சசி ஜி. 6) சஷி ஆனந்த் ஸ்ரீதரன். 7) நவ் ஷீன் யூசுப். 8) மரியம் ஷாசியா ஷா. 9) கிருத்திகா சிவநேசன். 10) கிரித்தாஜ் அசோக் குமார். 11) கே.மணிகண்டன். 12) டாக்டர். நித்யா பிராங்க்ளின். 13) தேவகி. 14) ஆர்த்தி சதீஷ்.

Tags : The top 14 contestants on the Master Chef show airing Saturday and Sunday on Sun TV
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...