×

புனேவிலிருந்து மேலும் 3,60,000 டோஸ் கோவிஷீல்டு வருகை

சென்னை: ஒன்றிய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்துக் கிடங்கிலிருந்து 3,60,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. அந்த 3,60,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 30 பார்சல்கள், புனேவிலிருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று பகல் 12.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதன்பின்பு தடுப்பூசி பார்சல்கள் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை  தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்திற்கு அவற்றை எடுத்துச் சென்றனர். அங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு தேவைகளுக்கு ஏற்ப பிரித்து அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Pune , Another 3,60,000 dose cow shield visits from Pune
× RELATED ரெண்டு பேருக்கும் கொம்பு ஊதும்...