×

மேகதாது அணை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அனுமதியின்றி கட்டப்படுவதாகவும், இதனால் பல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதி நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளது என என்று ஒரு பத்திரிக்கையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்பாயமானது தானாக முன்வந்து ஒரு வழக்கை பதிவு  செய்தது.

கடந்த ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ஒன்றிய சுற்றுசூழல் அமைச்சக அதிகாரிகள் காவிரி நீர்மேலாண்மை அதிகாரிகள் அடங்கிய 4 பேர் அடங்கிய குழுவை அமைத்து ஜூலை முதல் வாரத்திற்குள்ளாக மேகதாது விவகார தொடர்பாக ஆய்வு அறிக்கையை தக்க செய்ய வேண்டும் எனதென்மண்டல பசுமை தீர்பாயமானது உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்த உத்தரவானது முழுமைபெறாத பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரிக்க்கப்பட்டு கர்நாடக அரசின் கருத்தை கேட்காமல் ஒரு சார்பாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது எனவும், மேலும் ஏற்கனவே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என மத்திய வன மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு மனு அளித்துள்ளது. அதேபோல் உச்சநீதிமன்றத்திலும் மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கர்நாடக அரசு பதிலளித்துள்ள நிலையில் அந்த வழக்கானது நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் முழுமைபெறாத பத்திரிகை செய்தி அடிப்படையில் வழக்கை விசாரித்து ஆய்வு குழு அமைத்ததை ரத்து செய்யவேண்டும்.

இந்த மேலும் இதுதொடர்பான மனுக்களை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை மனுவை தேசிய பசுமை தீர்பாயத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்தது. இந்த மனுவை கடந்த ஜூன் 16-ம் தேதி விசாரித்த தேசியபசுமைத்தீர்ப்பாய தலைவர் ஆதர்ஸ்குமார்கோயல், நீதிபதிகள் சுஜீர்அகர்வால், எம்.சத்தியநாராயணன், ஆகியோர் அடங்கிய அமர்வானது தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் சுற்றுசூழல்,வனம் மற்றும் வனஉயிரி உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பாக எழுப்பப்பட்ட ஆட்சோபனைகள் உரிய ஆணையத்தின் முன்பு நிலுவையில் இருப்பதாகவும், முழுமைபெறாத பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரித்து தேவையில்லாத  கருத்தை பதிவு செய்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் கையாண்டு வரும் நிலையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்து உச்சநீதிமன்றத்தை மீறும் செயலாக இருக்கிறது என்ற குற்றசாட்டை அவர்கள் பதிவு செய்திருந்தனர். எனவே தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அமைத்த அந்த குழுவை ரத்துசெய்வதோடு இந்த வழக்கை முடித்ததுவைப்பதாகவும் ஒரு  உத்தரவை அவர்கள் பிறப்பித்திருந்தனர். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமனத்தில் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தை கையாள பசுமைத்தீர்ப்பாயத்திற்கு உரிமை உண்டு எனவும், அதனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என அந்த மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Government of Tamil Nadu ,National Green Tribunal ,Megha Dadu Dam , Megha Dadu Dam, National Green Tribunal, Government of Tamil Nadu
× RELATED கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை:...