ஒலிம்பிக்ஸை ஒட்டி டோக்கியோவில் நிறுவப்பட்ட ராட்சத ஒலிம்பிக் சின்னம் பாதுகாப்பாக அகற்றம்..!!

டோக்கியோ: ஒலிம்பிக்ஸை ஒட்டி டோக்கியோவில் நிறுவப்பட்டிருந்த ராட்சத ஒலிம்பிக் சின்னம் பாதுகாப்பாக அகற்றப்பட்டது. கடந்த ஜூலை 23ம் தேதி முதல் நடைபெற்று வந்த 32வது ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமைகளுடன் நிறைவுபெற்றன. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். பதக்க பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது.

அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்படைந்துள்ளன. இந்த நிலையில் 32வது ஒலிம்பிக்ஸை ஒட்டி டோக்கியோவில் உள்ள ஓடேப்பா மெரன் பார்க்கில் கடந்த ஆண்டு நிறுவப்பட்டிருந்த ராட்சத ஒலிம்பிக் வளையங்களை அதிகாரிகள் பாதுகாப்புடன் அகற்றினர். 15 மீட்டர் நீளம், 32 மீட்டர் அகலம், 1.7 மீட்டர் தடிமனுடன் அமைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் வளையங்களை செவ்வாய்கிழமையே சாய்க்க முடிவு செய்திருந்தனர். ஆனால் பலத்த காற்று காரணமாக ஒருநாள் அப்பணி ஒத்திவைக்கப்பட்டு புதன்கிழமை அகற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>