‘நீயா - நானா’ போட்டியால் விபரீதம் கள்ளக்காதலன் குத்திக்கொலை கள்ளக்காதலி தூக்கிட்டு தற்கொலை: மற்றொரு கள்ளக்காதலன் போலீசில் சரண்

பழநி: பழநி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலனை மற்றொரு கள்ளக்காதலன் குத்தி கொலை செய்தார். கள்ளக்காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே பாப்பம்பட்டியை சேர்ந்தவர் பத்மநாதன் (32). மடத்துகுளத்தில் உள்ள ஒரு அட்டை மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். பழநி அருகே சின்ன கலையம்புத்தூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அய்யனார் மனைவி விக்டோரியா (45). இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விக்டோரியா, கணவரை பிரிந்து சமத்துவபுரத்தில் வசித்து வந்தார்.விக்டோரியாவும் இதே அட்டை மில்லில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு சென்ற இடத்தில் பத்மநாதன், விக்டோரியா இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக மனைவி செல்லமணியிடம் கூறி விட்டு பத்மநாபன், விக்டோரியாவின் வீட்டிற்கு சென்றார். இரவு விக்டோரியா வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் கத்தியால் குத்தப்பட்டு குடல் சரிந்த நிலையில் பத்மநாபன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதேசமயம், விக்டோரியாவும் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

தகவலறிந்து எஸ்பி சீனிவாசன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். டிஎஸ்பி சிவா தலைமையிலான பழநி தாலுகா போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விக்டோரியா உடல் அருகே கிடந்த டைரியை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக விக்டோரியாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சங்கர் (32) என்பவர் பழநி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.முதல்கட்ட விசாரணையில், விக்டோரியாவிற்கு பத்மநாதன் மட்டுமின்றி, பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கருடனும் கள்ளத்தொடர்பு இருந்தது. சம்பவ நாளன்று விக்டோரியாவுடன் பகுவது தொடர்பாக சங்கருக்கும், பத்மநாதனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கர், பத்மநாதனை கத்தியால் குத்தி கொலை செய்தார். பிரச்னை பெரிதானதால் பயந்துபோன விக்ேடாரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சங்கரிடம், பழநி தாலுகா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>