×

பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய மெஸ்ஸியின் மெகா போஸ்டர் கேம்ப் நவ் ஸ்டேடியத்தில் இருந்து அகற்றம்!: ரசிகர்கள் ஏமாற்றம்..!!

ஸ்பெயின்: ஸ்பெயினின் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய பிரபல கால்பந்து ஆட்டக்காரர் லயோனல் மிஸ்ஸியின் மெகா போஸ்டர் அவர் பட்டைதீட்டப்பட்ட கேம்ப் நவ் ஸ்டேடியத்திலிருந்து அகற்றப்பட்டது ரசிகர்களிடம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. தனது வாழ்நாளையே பார்சிலோனா கிளப்பிற்காக அர்ப்பணித்தவர் லயோனல் மிஸ்ஸி. 778 போட்டிகளில் 672 கோல்களை பார்சிலோனா அணிக்காக அவர் விளாசியுள்ளார். இவ்வாறு கடந்த 21 ஆண்டுகளாக நகமும், சதையுமாக இருந்து வந்த பார்சிலோனா கிளப்பில் இருந்து மெஸ்ஸி வெளியேறிவிட்டார்.

ஊதிய பிரச்னை என பெரிதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தியை பத்திரிக்கையாளர்களிடம் அவர் கண்ணீர் மல்க அறிவித்த போது ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். தற்போது பிரான்ஸை சேர்ந்த பி.எஸ்.ஜி. எனப்படும் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியில் அவர் இணைந்திருக்கிறார். ரசிகர்கள் இனி யு.இ.எப்.ஏ. சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட போட்டிகளில் மெஸ்ஸியின் ஆட்டத்தை காணலாம்.

இந்நிலையில் ஸ்பெயினில் இத்தனை ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்த கேம்ப் நவ் ஸ்டேடியத்திலிருந்து மெஸ்ஸியின் போஸ்டரை கிளப் நிர்வாகம் அகற்றியுள்ளது. ராட்சத கிரேன் மூலமாக ஒரு படம் இல்லாமல் அகற்றிவிட்டார்கள். இதனால் மெஸ்ஸியின் ஸ்பெயின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.


Tags : Messi ,Camp Nou Stadium ,Barcelona , Barcelona, Messi, Foster, Camp Nou Stadium
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...