கூட்டு ராணுவப் பயிற்சிகளைத் தொடர்ந்தால் , அமெரிக்காவும் தென்கொரியாவும் புதிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்க நேரிடும் : வடகொரிய எச்சரிக்கை!!

பியாங்யாங் : கொரிய தீப கற்பத்தில் அமெரிக்கா, தென் கொரியா ராணுவத்தினர் இடையேயான கூட்டுப்பயிற்சிக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சிகளைத் தொடர்ந்தால், அவை வட கொரியாவிடமிருந்து பெரிய அளவில் பாதுகாப்பு மிரட்டல்களை எதிர்நோக்கக்கூடும் என வட கொரிய உயர் அதிகாரி கிம் யோ ஜொங் (Kim Yo Jong) எச்சரித்துள்ளார்.வரும் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை கொரிய எல்லையில், அமெரிக்க மற்றும் தென் கொரிய படைகள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். கூட்டு ராணுவ பயிற்சியின் முன்னோட்டமாக 4 நாள் ஆரம்ப பயிற்சியை நேற்று இரு நாட்டு வீரர்களும் தொடங்கின. இதற்கு வடகொரிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம்யோ ஜாங், அமெரிக்காவும் தென் கொரியாவும் கொரிய தீபக கற்பத்தில் பதற்ற நிலையை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். வட கொரியாவின் எச்சரிக்கைகளை மீறி ராணுவ பயிற்சி நடத்துவது தென் கொரியாவின் துரோக முடிவு என்றும் அவர் கூறியுள்ளார்.வடகொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்கவும் முன்கூட்டியே தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திறன்களை வலுப்படுத்துவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.

Related Stories: