லாரி மோதி பாதிரியார் பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி கீழ்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாம்பிரபு (59). பாதிரியார். இவரது பராமரிப்பில் உள்ள ஜோன் (20) என்ற மாணவனுக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளதால், கல்லூரியில் சேர்க்க இருவரும் பைக்கில் நேற்று சென்றனர். நசரத்பேட்டை அருகே சென்றனர். அப்போது பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாதிரியார் உயிரிழந்தார். போலீசார்  லாரி டிரைவரை வெங்கடேசனை(33) கைது செய்தனர்.

Related Stories:

More