புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள்: தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி அறிவிப்பு

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் தெற்கு ஒன்றிய தலைவராக திருவூர் ஆர்.கே.நாகா, ஒன்றிய செயலாளராக வேப்பம்பட்டு சி.டி.தியாகு, ஒன்றிய பொருளாளராக இ.சிவா,  ஒன்றிய அமைப்பாளராக புட்லூர் டேனி மற்றும் அணிகளின் பொறுப்பாளர்களை கட்சித் தலைவர் பூவை  எம்.ஜெகன்மூர்த்தி  அறிவித்தார். அப்போது அவருக்கு ஒன்றிய நிர்வாகிகள்  ஆளுயர ரோஜா மாலை மற்றும் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது மாநில நிர்வாகிகள் தொழவூர் எம்.மாறன், பூங்கா நகர் பா.காமராஜ், முல்லை கே.பலராமன், மாவட்ட செயலாளர் கூடப் பாக்கம் இ.குட்டி, மாவட்ட தலைவர் பிரீஸ் ஜி.பன்னீர், மாவட்ட பொருளாளர் நாயப்பாக்கம் டி.மோகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: