×

பெரியபாளையம் அருகே புதிய டிரான்ஸ்பார்மர்கள் இயக்கம்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே 3 ஊராட்சிகளில் புதிய டிரான்ஸ்பார்மர்களை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். பெரியபாளையம் அருகே திருக்கண்டலம், வடமதுரை, ஆத்துப்பாக்கம் ஆகிய 3 ஊராட்சிகளில் விவசாயிகள் வியாபாரிகள், மாணவர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சிகளில் கடந்த சில வருடங்களாக அடிக்கடி மின் பழுதாவது, குறைந்த மின் அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டது.  இதனால், இப்பகுதி மக்கள் தங்கள் கிராமத்திற்கு புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில், புதிய டிரான்ஸ்பார்மர்கள் வைக்கப்பட்டது. இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது.  இதில், மின் வாரிய செயற்பொறியாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு, வக்கீல்கள் தேவேந்திரன், சீனிவாசன், டி.கே.முனிவேல், ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர்கள் திருக்கண்டலம் மதன், வடமதுரை காயத்திரி, ஆத்துப்பாக்கம் நிர்மலா உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் புதிய டிரான்ஸ்பார்கள் துவக்கி வைத்தார். பின்னர், பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். பின்னர், வடமதுரையில் தள்ளு வண்டி வியாபாரிகள் 2 பேருக்கு சொந்த செலவில் உதவிதொகையாக தலா ரூ.5000 வழங்கினார். மாற்று திறனாளிக்கு 3 சக்கர பேட்ரி வண்டிக்கு புதிய பேட்டரி வாங்க ரூ.18 ஆயிரம் வழங்கினார். திருக்கண்டத்தில் புதிதாக ஜெனரேட்டர் துவக்கி வைத்தார்.  


Tags : Large , Periyapalayam, New Transformers, MLA,
× RELATED பொன்னமராவதி பகுதியில் கோலாகலமாக...