×

பொதட்டூர்பேட்டையில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை பேரூராட்சி சார்பில், 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் பசுமை திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், 2 மரக்கன்றுகள் நடும் பணியை செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில் பேரூராட்சியில்  தூய்மை, பசுமை உறுதிப்படுத்துவம் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இதன், ஒரு பகுதியாக மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு தினத்தை யொட்டி, பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகின்றது.  பிரதான சாலை பகுதிகள், பேருந்து நிலையம், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் பேரூராட்சி பணியாளர்கள் கொண்டு செயல் அலுவலர் முனுசாமி  முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. பொதுமக்களும் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து தூய்மை, சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.

Tags : Pothatturpet , Potaturpet, sapling, work
× RELATED பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில்...