மாற்றுத்திறனாளிகளுக்கு இணையதளம்: கலெக்டர் விஜயா ராணி தகவல்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் இணையதளம் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை கலெக்டர் விஜயா ராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சென்னை மாவட்ட இணையதளத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் விவரம் அறிந்து விண்ணப்பபடிவங்கள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த இணையதளத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித்தொகை, சுயதொழில் வங்கி கடன் உதவி, உதவி உபகரணங்கள், திருமண உதவித் தொகை, பராமரிப்பு உதவித்தொகை, பாதுகாவலர் சான்று, இலவச பேருந்து பயண சலுகை, மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டம் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கும் வகையிலும், சில திட்டங்கள் நேரடியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கும் வகையிலும் உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சட்டங்கள், சட்டவிதிகள், கல்வி வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்துதல், அரசு பணியாளர் நலனுக்கான அரசாணைகள், வழிகாட்டுதல்கள் ஆகியவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சிறப்பு பள்ளிகள் இல்லங்கள், சிறப்பு கல்வி நிறுவனங்கள் விவரங்களும் இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளம் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பார்வையற்றவர்கள் பேசும் கணினி மற்றும் செல்பேசியின் மூலம் அறியும் வகையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக தேசிய தகவல் அலுவலரால் இணையதள பகுதி ஏற்படுத்தப்பட்டு, https://chennai.nic.in/-Departments என்ற பகுதியில் ஆங்கிலத்திலும், https://chennai.nic.in/ta/ துறைகள் என்ற பகுதியில் தமிழிலும் சென்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: